

ஆனாலும் அவன் எவ்வளவாகிலும் சந்தேகப்படாமல் விசுவாசத்தோடே கேட்கக்கடவன்; சந்தேகப்படுகிறவன் காற்றினால் அடிபட்டு அலைகிற கடலின் அலைக்கு ஒப்பாயிருக்கிறான் (யாக் 1:6).
ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய நாளில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, நாம் கர்த்தரிடத்தில் ஒன்றைக் கேட்க்கும் போது விசுவாசத்தோடு கேட்க வேண்டும். நம்முடைய விசுவாசத்தில் சிறிதளவும் சந்தேகம் இருக்கக் கூடாது. கர்த்தர் ஜெபத்தில் கேட்க்கிறவற்றைக் கொடுப்பார் என்று விசுவாசிக்க வேண்டும், வேதம் சொல்லுகிறது , விசுவாசமில்லாமல் தேவனைப் பிரியப்படுத்த முடியாதென்று. ஒரு சிலர் சூழ்நிலை எப்படியாக இருந்தாலும் எல்லா சூழ்நிலைகளிலும் தேவனையே சார்ந்து, அவர் மீது அசைக்க முடியாத விசுவாசம் வைத்திருப்பார்கள். அவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை நிலையாக இருக்கும். ஆனால் வேறு சிலரோ அப்படியல்ல வாழ்க்கையில் எல்லாம் தங்களுக்கு சாதகமாக நடக்கும் போது உற்சாகமாக , சந்தோஷமாக இருப்பார்கள், கஷ்டம் வந்து விடடால் சோர்ந்து போய் விடுவார்கள், கடலின் அலையைப் போல் மேலும், கீழும் அலைந்து கொண்டிருப்பார்கள். இவர்களுடைய ஆவிக்குரிய வாழ்க்கை நிலையாக இருக்காது.
பிரியமானவர்களே, கர்த்தரிடத்தில் ஒன்றைக் கேட்க்கும் போது சந்தேகத்தோடு கேடடால் அவரிடமிருந்து எதையுமே பெற்றுக்கொள்ள முடியாது, எல்லா சூழ்நிலைகளிலும் விசுவாசத்தில் உறுதியாக இருக்க வேண்டும் , ஒரு சிறிதளவும் உள்ளத்தில் சந்தேகம் இருக்கக் கூடாது. நாம் விசுவாசிக்கிறவர் நம்முடைய சூழ்நிலைகளை பார்க்கிலும், நம்முடைய பிரச்சினைகளைப் பார்க்கிலும் பெரியவர், அவராலே செய்ய முடியாத காரியம் என்று சொல்ல ஒன்றுமே இல்லை, அவர் சர்வ வல்லவர், ஆகவே எல்லா சூழ்நிலைகளிலும் கர்த்தருக்கு நன்றி செலுத்தி, வாழ்க்கையில் சிறிதளவும் அவர் மேல் சந்தேகபடாமல் அவரையே சார்ந்து எப்போதும் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாக இருக்க வேண்டும். யோபுவை பாருங்கள் அவன் கர்த்தரை இன்னார் என்று அறிந்து இருந்தபடியால், அவனுக்கு வாழ்க்கையில் இழப்புக்கள், வருத்தங்கள் வந்த போதும் தேவன் மீது விசுவாசமாக இருந்தான், அவனுக்கு தெரியும் தேவனால் அவனுடைய சூழ்நிலைகளை மாற்றியமமைத்து இழந்து போன நிம்மதியையும், சந்தோஷத்தையும், சமாதானத்தையும் திருப்பி கொடுக்க முடியும் என்று, அல்லேலுயா.
தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
Add comment
Comments
May God bless you, your family and your excellent ministerial works.
Amen