எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம் (சங் 73:28 a)

 

ஆண்டவரும் , இரட்சகருமாகிய இயேசுகிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளுவோம்.

 

பிரியமானவர்களே, இந்த சங்கீதத்தை ஆசாப் எழுதியிருக்கிறார், இவர் தாவீது ராஜாவின் நாட்களில் எருசலேம் தேவாலயத்தின் பாடல் குழுவின் தலைவராக (choir leader) இருந்தார். இவர் சொல்லுகிறார் ‘எனக்கோ, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே நலம்’  என்று. ஆம் பிரியமானவர்களே, தேவனை அண்டிக்கொண்டிருப்பதே எனக்கும், உங்களுக்கும் நலமான காரியம். எந்த அளவு நாம் தேவனுடைய வார்த்தைக்கு கீழ்ப்படிந்து, அவருடைய கட்டளைகளைக் கைக்கொண்டு, அவருடைய சித்தத்தைச் செய்து அவரை அண்டிக்கொண்டிருக்கிறோமோ அந்த அளவு தேவனும் நமக்கு அருகாமையில் வந்து , அவர் நமக்கு நல்ல பாதுகாவலராக இருந்து நம்மை எல்லா தீங்குக்கும், ஆபத்துக்கும், கொடிய நோய்களுக்கும் விலக்கிப் பாதுகாத்துக் கொள்ளுவார். அல்லேலூயா !

 

தேவன் இயேசு உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 


ஜெபம்


கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். இந்நாளில் நீர் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன் நாங்களும் எருசலேமின் பாடல் குழு தலைவன் ஆசாப்பைப் போல் உமது கற்பனைகளைக் கைக் கொண்டு உம்மை அண்டி வாழ எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் படி ஜெபிக்கிறேன். எங்களுடைய விண்ணப்பத்தைக் கேட்டு எங்களுக்கு பதில் கொடுக்கிறதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.