

உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்; உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர் (யோபு 5:24)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
மேலே கூறப்பட்டுள்ள வசனத்தை இரண்டு பகுதிகளாக பிரிக்க விரும்புகின்றேன்,
1 . உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்
2 . உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்
1 . உம்முடைய கூடாரம் சமாதானத்தோடிருக்கக் காண்பீர்
இதன் அர்த்தம் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து அவரை ஆண்டவராகவும், இரச்சகராவும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏற்றுக் கொண்டு அவரை மெய்யாகவே முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் சேவிக்கும் அவருடைய பிள்ளைகளாகிய உங்களுடைய கூடாரத்தில் (வீட்டில்) அதாவது உங்களுடைய குடும்பத்தில் கர்த்தருடைய நிரந்தரமான மெய்யான சமாதானமும், நிம்மதியும், மகிழ்ச்சியும், சந்தோஷமும், சரீர ஆரோக்கியமும், செழிப்பும் எப்போதும் இருக்கும். அல்லேலூயா !
2 . உம்முடைய வாசஸ்தலத்தை விசாரிக்கும்போது குறைவைக் காணமாட்டீர்
இதன் அர்த்தம் : ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நீங்கள் விசுவாசித்து அவரை ஆண்டவராகவும், இரச்சகராவும் உங்களுடைய வாழ்க்கையில் நீங்கள் ஏற்றுக் கொண்டு அவரை மெய்யாகவே முழு இருதயத்தோடும், முழு பலத்தோடும் சேவிக்கும் அவருடைய பிள்ளைகளாகிய உங்களுடைய குடும்பத்தில் குறைவுகள் இருக்காது, அதாவது உங்களுடைய பிள்ளைகள் கீழ்ப்படியாதவர்களாகவோ, ஊதாரிகளாகவோ, பொறுப்பிலாதவர்களாகவோ இராமல் அவர்கள் கர்த்தருக்குள் கீழ்ப்படிவுள்ள பிள்ளைகளாக, நல்ல பழக்க வழக்கமுள்ள ஒழுக்கமுள்ள பிள்ளைகளாக, கனி கொடுக்கிற (மற்றவர்களுக்கு உதவி செய்யும்) பிள்ளைகளாக இருப்பார்கள். மற்றும் உங்களுடைய குடும்பம் மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக, முன்மாதிரியாக இருக்கும். அல்லேலூயா !
ஆண்டவர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
ஜெபம்
கிருபையின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன், இந்நாளில் நீர் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீர் வார்த்தையில் உண்மையுள்ளவராக இருக்கிறதட்க்காக நன்றி செலுத்துகிறேன். வார்த்தையின் படி நீர் எங்களுடைய கூடாரத்தில் எந்த குறைவும் இல்லாத படி நிறைவாய் ஆசிர்வதிக்கிறதட்க்காகவும், சமாதானத்தினால் நிரப்புவதட்க்காகவும் உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
Add comment
Comments
Keep up your good work