இருதயத்திலிருந்து அகற்ற வேண்டிய மூன்று தீய குணங்கள்

Published on 18 January 2023 at 05:00


வீண்புகழ்ச்சியை விரும்பாமலும், ஒருவரையொருவர் கோபமூட்டாமலும், ஒருவர்மேல் ஒருவர் பொறாமைகொள்ளாமலும் இருக்கக்கடவோம் (கலா 5:26).


ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.

1 . வீண்புகழ்ச்சி
2 . கோபம்
3 . பொறாமை


வீண்புகழ்ச்சி - வீண்புகழ்ச்சியை விரும்ப வேண்டாம் என்று தேவன் எங்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றார். இன்று   அநேகர் மற்றவர்கள் தங்களை புகழ வேண்டும் என்று தங்களுடைய பணத்தையும், செல்வாக்கையும் பயன்படுத்துகிறார்கள். மனுஷரிடத்தில் இருந்து வருகின்ற புகழ்ச்சி வீண் புகழ்ச்சியாகவே இருக்கின்றது, மனுஷன் இன்றைக்கு உங்களை புகழுவான் அதே மனுஷன் நாளைக்கு உங்களை இழிவாக பேசுவான், அது மனுஷனுடைய இயற்கயான சுபாவம். ஆகவே நீங்கள் மனுஷன் உங்களை புகழ வேண்டும் என்று காரியங்களை செய்வீர்களானால் ஒருநாள் வெட்கப்பட்டு போய் விடுவீர்கள். வேதம் சொல்லுகின்றது “மாம்சமெல்லாம் புல்லைப்போலவும், மனுஷருடைய மகிமை யெல்லாம் புல்லின் பூவைப் போலவுமிருக்கிறது; புல் உலர்ந்தது, அதின் பூவும் உதிர்ந்தது” ( 1 பேதுரு 1: 24 ) ஆகவே பிரியமானவர்களே நீங்கள் மனுஷனிடமிருந்து வரும் வீண் புகழ்ச்சியை விரும்பாதீர்கள். அல்லேலூயா ! 


கோபம் - ஒருவரை ஒருவர் கோபம் மூட்டாமல் இருக்கும் படி தேவன் எங்களுக்கு ஆலோசனை கொடுக்கின்றார். நாங்கள் கோபத்தில் பேசுகின்ற ஒவ்வொரு வீணான வார்த்தைகள் குறித்து நியாயதீர்ப்பின் நாளிலே கணக்கு கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆபேலையும் அவன் காணிக்கையையும் கர்த்தர் அங்கீகரித்ததன் நிமித்தம் காயின் தன் சகோதரன் ஆபேலின் மீது கோபப்பட்டு அவனை கொலை செய்தான். வேதம் சொல்லுகின்றது "அன்றியும், புருஷர்கள் கோபமும் தர்க்கமுமில்லாமல் பரிசுத்தமான கைகளை உயர்த்தி, எல்லா இடங்களிலேயும் ஜெபம்பண்ணவேண்டுமென்று விரும்புகிறேன்” ( 1 தீமோ 2:8)


பொறாமை
- பொறாமை கொள்ளாமல் இருக்கும் படி தேவன் எங்களுக்கு ஆலோசனை கூறுகின்றார். மனுஷர்களாகிய எங்களுக்கு பொறாமை வருவது இயல்பு, ஆனால் பொறாமை எங்களை மேட்கொள்ளாத வண்ணம், நம்முடைய வாழ்க்கையை அழித்து விடாத வண்ணம் பொறாமையை உள்ளத்திலிருந்து அகற்றி விட வேண்டும், பொறாமைப்படும்போது, தேவன் நமக்காக ஆயத்தப்படுத்தி வைத்திருக்கிற ஆசீர்வாதங்களை அவரிடமிருந்து பெற்றுக் கொள்ளாமல் இழந்து போகின்றோம். ஜனங்கள் தாவீதை போற்றி புகழ்ந்த போது சவுலினால் அவற்றை அதை தாங்கிக் கொள்ள முடியவில்லை, அவனுக்குள் உண்டான அந்த பொறாமை தாவீதை கொலை செய்ய நினைத்தது.
பிரியமானவர்களே, உங்களுடைய அலுவலகத்தில் உங்களுடைய சக வேலையாளுக்கு உயர்வு கிடைக்கும் போது உங்களால் சந்தோஷ பட முடியவில்லையா? வேதம் சொல்லுகின்றது ‘சொஸ்தமனம் உடலுக்கு ஜீவன்; பொறாமையோ எலும்புருக்கி என்கிறது ( நீதி 14:30 ) என்று. பொறாமை உங்களை சோகத்தில் ஆழ்த்தி உங்களை அழிக்கும் வல்லமை கொண்டது. பொறாமை பட வேண்டாம்.

 

பிரியமானவர்களே, வீண் புகழ்ச்சியை விரும்புதல், ஒருவரையொருவர் கோபமூட்டுதல், ஒருவர்மேல் ஒருவர் பொறாமை கொள்ளுதல் இவைகள் எல்லாம் தேவனிடமிருந்து வருபவைகளல்ல, இவைகள் எல்லாம் பிசாசின் கிரியைகள். ஆகவே பிசாசின் கிரியைகளாகிய இவற்றுக்கு எதிர்த்து நில்லுங்கள்.


ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் உங்களை தேவ சமூகத்தில் ஆராய்ந்து பார்த்து இப்படிப் பட்ட தீய குணங்கள் உங்களினிடத்தில் இருக்குமானால் வேத வசனத்துக்கு கீழ் படிந்து இப்படிப் பட்ட காரியங்களை உங்களிடமிருந்து அகற்றிப் போட்டு, “நாம் நம்மிடத்தில்அன்பு கூறுகிறது போல்  பிறரிடத்திலும் அன்பு கூறுவோம்” அல்லேலூயா ! 


தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 4 stars
2 votes

Add comment

Comments

There are no comments yet.