

ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, இப்படியே கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறைவேற்றுங்கள் (கலா 6:2)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவினுடைய பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும் என்று வேதம் நமக்கு ஆலோசனை கூறுகின்றது. அல்லேலூயா !
ஆம் பிரியமானவர்களே, கிறிஸ்துவின் பிரமாணம் அன்பின் பிரமாணம். கிறிஸ்துவினுடைய சீஷர்களாகிய நாம் அவருடைய அடிச் சுவடுகளை பின்பற்ற வேண்டும். அடுத்தவர்கள் பாடுகளுக்கூடாய், வேதனைகளுக்கூடாய் கடந்து செல்லும் போது தேவனுடைய பிள்ளைகளாகிய நாம் அவர்கள் அனுபவிக்கும் பாடுகளை கண்டும் காணாதவர்களைப் போல் இருந்து விடாமல், அவர்களை அன்போடும், கருசனையோடும் விசாரித்து நம்மால் முடிந்த அளவு அவர்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து இயேசு கிறிஸ்துவினுடைய பிரமாணமாகிய அன்பின் பிரமாணத்தை நிறை வேற்ற வேண்டும். அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
Add comment
Comments