

உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொன்னபடி, அவர் தாமே உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார் (யோசு 23:10)
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, உங்களுக்கு விரோதமாக இருக்கும் உங்களுடைய சூழ்நிலையைப் பார்த்து பயப்படுகிறீர்களா? பயப்பட வேண்டாம் கர்த்தரை நம்புங்கள், அவர் மீது உங்களுடைய விசுவாசத்தை வையுங்கள், அவர் தாமே உங்களுக்காக யுத்தம் பண்ணி காரியத்தை வாய்க்கப் பண்ணுகிறவர். அல்லேலூயா !
பிரியமானவர்களே, அன்று இஸ்ரவேல் ஜனங்களுக்கு தாம் சொல்லியிருந்த வார்த்தையில் கர்த்தர் உண்மையுள்ளவராக இருந்து, அவர்களுடைய எதிரிகளோடு அவர் யுத்தம் பண்ணி அவர்களுக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுத்த கர்த்தர் இன்றைக்கு உங்களுக்கும் தான் சொன்ன வார்த்தையில் உண்மையுள்ளவராக இருந்து, உங்களுக்காக உங்களுடைய எதிரிகளோடு வாழ்க்கையில் யுத்தத்தை புரிந்து ஜெயத்தைக் கொடுக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !
என்ன யுத்தம் என்று நினைக்கிறீங்களா? பிரியமானவர்களே, இந்த பிரபஞ்சத்தில் நமக்கு அதிகாரங்களோடும், இப்பிரபஞ்சத்தின் அந்தகார லோகாதிபதிகளோடும், வானமண்டலங்களிலுள்ள பொல்லாத ஆவிகளின் சேனைகளோடும் நமக்குப் போராட்டம் உண்டு” என்று வேதம் சொல்லுகின்றது (எபே 6: 12)
பிரியமானவர்களே, உங்களுடைய எதிரியான பிசாசானவன் உங்களுக்கு விரோதமாக அவன் போட்டு இருக்கின்றதான எல்லா சூழ்ச்சிகளையும், சதி திட்டங்களையும், தந்திரங்களையும் கர்த்தர் நிர்மூலமாக்கிப் போட்டு உங்களுக்கு அவர் வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுக்க உண்மையுள்ளவராகவும், வல்லமையுள்ளவராகவும் இருக்கிறார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தரையும், அவருடைய வார்த்தையையும் விசுவாசியுங்கள். அவர் உங்களுடைய எதிரியான பிசாசானவனோடு யுத்ததை புரிந்து உங்களுக்கு வாழ்க்கையில் ஜெயத்தைக் கொடுப்பார். அல்லேலூயா !
கர்த்தர் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
Add comment
Comments