ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு இனிய தந்தையார் தின வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.

 

பிரியமானவர்களே, இன்றைய தினத்தில் பரலோக தகப்பனுடைய அன்பு எப்படிப்பட்ட்து என்பதை வேத புஸ்தகத்தில் எழுதப்பட்டிருக்கிற ஒரு உவமையின் மூலமாக உங்களுக்கு கூற விரும்புகின்றேன். 

 

ஒரு மனுஷனுக்கு இரண்டு குமாரர் இருந்தார்கள். அவர்களில் இளையவன் ஒருநாள் தன்னுடைய தகப்பனிடம் ஆஸ்தியில்  அவனுக்கு வரும் பங்கை தரும் படி கேட்க்கிறான். தகப்பனும் ஆஸ்தியைப் பங்கிட்டு அவனுக்கு கொடுத்தார், சில நாளைக்குப்பின்பு அவன் எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு, தூரதேசத்துக்குப் புறப்பட்டுப் போனான், அங்கே அவன் துன்மார்க்கமாய் வாழ்ந்து அவனுடைய  ஆஸ்தியை எல்லாம் அழித்துப் போடுகிறான், இந்த காலத்தில் அந்த தேசத்திலே கொடியபஞ்சம் வந்தது, அப்போது அவன் அந்த தேசத்துக் குடிகளில் ஒருவனிடத்தில் போய் வேலைக்கு சேருகிறான். அவன் இவனை தன் வயல்களில் பன்றிகளை மேய்க்கும்படி அனுப்புகிறான். அப்பொழுது அவன் பன்றிகள் தின்கிற தவிட்டினாலே தன் வயிற்றை நிரப்ப ஆசையாயிருந்தான், ஆனால் ஒருவனும் அதை அவனுக்குக் கொடுக்கவில்லை. அப்போது அவன் புத்தி தெளிந்து ஒரு தீர்மானத்தை எடுத்துக் கொண்டு, தன்னுடைய தகப்பனிடத்தில் போய் இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரனல்ல, உம்முடைய கூலிக்காரரில் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்று சொல்லுவதட்க்காக எழுந்து புறப்பட்டு, தன் தகப்பனிடத்தில் வந்தான். தகப்பனும் தன்னுடைய மகன் திரும்பி அவரிடம் வருவதைக் கண்டு மனதுருகி, ஓடி, தன் மகனின் கழுத்தைக் கட்டிக்கொண்டு, அவனை முத்தஞ்செய்தான்.அப்போது அவன் தன்  தகப்பனிடம் தகப்பனே, பரத்துக்கு விரோதமாகவும், உமக்கு முன்பாகவும் பாவஞ்செய்தேன், இனிமேல் உம்முடைய குமாரன் என்று சொல்லப்படுவதற்கு நான் பாத்திரன் அல்ல என்று சொன்னான். அப்பொழுது அவனுடைய தகப்பன் அவனுடைய  ஊழியக்காரனிடம் நீங்கள் உயர்ந்த வஸ்திரத்தைக் கொண்டுவந்து, என் மகனுக்கு  உடுத்தி அவன் கைக்கு மோதிரத்தையும் கால்களுக்குப் பாதரட்சைகளையும் போட்டு, ஒரு கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள் நாம் சந்தோஷமாய் இருப்போம் என்று சொன்னான் (லூக் 15:11 - 24) அல்லேலூயா ! 

 

ஆம் பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள சம்பவத்தில் தன்னுடைய குமாரன் மனந்திரும்பி வந்த போது தகப்பன் அவன் செய்த தவறை மன்னித்து அவனை அன்போடு ஏற்றுக் கொண்டார்.

 

பிரியமானவர்களே, ஒருவேளை நீங்களும், நானும் நம்முடைய பரலோக தேவனுக்கு விரோதமாக பாவம் செய்து அவரை  விட்டு விலகி அவரை வாழ்க்கையில் தேடாமல் இருப்போமானால் இப்போதே நம்முடைய தப்பிதங்களை, பாவங்களை பரலோக தகப்பனாகிய இயேசு கிறிஸ்துவிடம் அறிக்கை செய்யும் போது அவர் எங்களை மன்னித்து அவரின் பிள்ளையாக ஏற்றுக் கொண்டு எங்களை ஆசிரவ்திக்க அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா ! 

 

பரலோக தகப்பன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

 

Rating: 5 stars
2 votes

Add comment

Comments

There are no comments yet.