

அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான் (சங் 40:4 )
ஆண்டவரும், இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
பிரியமானவர்களே, மேலே கூறப்பட்டுள்ள வேத வசனத்தை இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக்கொள்ளுவோம்.
பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் வாழும் ஜனங்களில் அநேகர் தங்களைக் குறித்து பெருமையாக பேசி அவர்களை நம்பும் படி கூறுவார்கள், ஆனால் இவர்கள் மாயமாலகாரர்கள், இவர்களுடைய வார்த்தைகளில் உண்மையிருக்காது, இவர்களை நம்பி நீங்கள் போவீர்களானால் உங்களை அவர்கள் பாதியிலே கை விட்டு விடுவார்கள்.
அதனால் தான் தாவீது இங்கே ‘அகங்காரிகளையும் பொய்யைச் சார்ந்திருக்கிறவர்களையும் நோக்காமல், கர்த்தரையே தன் நம்பிக்கையாக வைக்கிற மனுஷன் பாக்கியவான்‘ என்று கர்த்தரை நம்பும் படி அவர் கர்த்தருடைய பிள்ளைகளாகிய நமக்கு ஆலோசனை கூறுகிறார். அல்லேலூயா!
பிரியமானவர்களே, தாவீது தமது எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தரையே நம்பி அவரையே சார்ந்து வாழ்ந்தார், அதனால் அவர் வாழ்க்கையில் வெட்கப்பட்டு போக கர்த்தர் விடவில்லை, கர்த்தர் அவரை வாழ்க்கையில் உயர்த்தி கனப் படுத்தினார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, நாங்களும் தாவீதை போல் நம்முடைய எல்லாச் சூழ்நிலைகளிலும் கர்த்தரையே நம்பி வாழ்வோம், அவர் ஒருவராலேயே நம்மை விடுவிக்க முடியும், அல்லேலூயா !
தேவன் இயேசு கிறிஸ்து உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
info@godismysalvationministries.com
Add comment
Comments