இடறல்களை வழியிலிருந்து எடுத்துப் போடும் தேவன்

Published on 30 January 2023 at 05:00
அனுதின தியான வசங்கள்
Audio – 1.2 MB 110 downloads

ஆண்டவரும், இரச்சகருமாகியஇயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வசனங்கள்,


வழியை உயர்த்தி உயர்த்தி, அதைச் செம்மைப்படுத்தி, இடறல்களை என் ஜனத்தின் வழியிலிருந்து எடுத்துப்போடுங்கள் என்னப்படும் (ஏசா 57:14 )


தடைகளை நீக்கிப்போடுகிறவர் அவர்களுக்கு முன்பாக நடந்துபோகிறார் ( மீகா 2 :13 A)

 

பிரியமானவர்களே, இந்த பூலோகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் நம் ஒவ்வொருவருக்கும் பாடுகளும், உபத்திரவங்களும் நிச்சயம் உண்டு, ஆனால் பிரியமானவர்களே, நல்ல செய்தி என்னெவென்றால் நம்மை சிருஷ்டித்தவரும், நம்முடைய ஆண்டவரும், நம்முடைய இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்து அவரை நம்புகிற ஒவ்வொரு பிள்ளைகளுடைய வாழ்க்கையிலும் அவர்கள் இந்த பூலோகத்தில் ஜீவிப்பதுக்கு தடையாக இருக்கும் ஒவ்வொரு இடறல்களையும், தடைகளையும் நீக்கிப் போட்டு, அவர்கள் இந்த பூலோகத்தில் சமாதானமாகவும், ஆறுதலாகவும், நிம்மதியாகவும் வாழ அவர் உதவி செய்கிறார். அல்லேலூயா!

 

பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவருக்கு  “தடைகளை நீக்கிப்போடுகிறவர்”என்று ஒரு பெயர் உண்டு. அல்லேலூயா!

 

ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் இந்த பூலோகத்தில் வாழும் இந் நாட்களில் உங்களுக்கு இருக்கும் உங்களுடைய  பிரச்சனைகளில் உங்களுடைய கவனத்தை செலுத்துவதை நிறுத்தி விட்டு, உங்களுடைய பிரச்சனைகளை, உங்களுடைய தடைகளை, உங்களுடைய இடறல்களை நீக்கிப் போடுகிற ஆண்டவர் இயேசு கிறிஸ்து மீது உங்களுடைய கவனத்தை செலுத்துங்கள். அல்லேலூயா ! 


ஜெபம்

அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக நன்றி செலுத்துகின்றேன். தடைகளே, இடறல்களை நீக்கிப் போடுகிற நம்முடைய ஆண்டவரே எங்கள் வாழ்க்கையில் இருக்கும் தடைகளை, இடறல்களை நீக்கிப் போட்டு எங்களை இந்த பூலோகத்தில் ஆசிர்வதிக்கும் படி ஜெபிக்கிறேன். நீர் எங்களுடைய ஜெபத்தைக் கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் நல்ல பிதாவே ஆமென்.

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

info@godismysalvationministries.com

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.