

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.
என் ஜனங்கள் நான் அளிக்கும் நன்மையினால் திருப்தியாவார்கள் ‘ என்று கர்த்தர் சொல்லுகிறார் (எரேமியா 31:14 B)
பிரியமானவர்களே, பாபிலோன் தேசத்தில் சிறையிலிருந்த யூத ஜனங்கள் தங்களுடைய சந்தோஷத்தையும், நிம்மதியையும், சமாதானத்தையும் இழந்து வருத்தங்களோடும், வேதனைவுகளோடும் இருந்த போது கர்த்தர் எரேமியா தீர்க்கதரிசி மூலம் அவருடைய பிள்ளைகளாகிய யூத ஜனங்களோடு சில ஆறுதலான வாக்குத்தத்த வார்த்தைகளோடு பேசி தான் இன்னும் அவர்களை நேசிக்கிறார் என்பதை வெளிப்படுத்தினார். அவ்வாறு அவர்கள் வேதனைவுகளோடும், வருத்தங்களோடும் இருந்த அவர்களுக்கு கர்த்தர் கொடுத்த அட்புத்தமான வாக்குத்தத்த வசனம் இது.
பிரியமானவர்களே, இன்றைக்கு இந்த வருடத்தில் இரண்டாம் மாதத்துக்குள் காலடி எடுத்து வைக்கும் இயேசுவை ஆண்டவராக ஏற்றுக் கொண்ட எனக்கும், உங்களுக்கும் கர்த்தர் இந்த வசனத்தை வாக்குத்தமாக கொடுக்கின்றார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, கர்த்தர் உங்களுக்கு நன்மையானதை இந்த மாதத்தில் தரப் போகிறார், அவர் தரும் நன்மை எப்பொழுதுமே உங்களுக்கு திருப்தியை கொடுக்கும் அதனால் நீங்கள் திருப்தியாவீர்கள். அல்லேலூயா !. வாக்குக் கொடுத்த கர்த்தர் தனது வாக்குத்தத்தத்தில் உண்மை உள்ளவராக இருக்கிறார். கர்த்தருடைய வார்த்தையை அப்படியே நீங்கள் விசுவாசித்து, அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்துக்காகக் கர்த்தருக்கு ஒவ்வொரு நாளும் நன்றி செலுத்துங்கள். நிச்சயமாக கர்த்தருடைய நன்மையான கரம் உங்கள் வாழ்க்கையில் அமர்ந்து இருப்பதையும், அவர் உங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தம் நிறைவேறுவதையும் நீங்கள் காண்பீர்கள். உங்களுடைய வாழ்க்கையில் உங்களுக்கு விரோதமாக இருக்கும் சூழ்நிலை மாற போகுது, அவர் உங்களை வாழ்க்கையில் உயர்த்தப் போகிறார், உங்களுக்கு கர்த்தர் நன்மையானவைகளை கொடுக்கப்போகிறார், அவர் அளிக்கும் நன்மையினால் நீங்கள் திருப்தியடையப் போகிறீர்கள் , அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். நீர் இந்த நாளில் எங்களுக்குக் கொடுத்த வாக்குத்தத்தத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். நீர் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருபதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நாங்கள் உம்முடைய வார்த்தையை விசுவாசித்து நீர் எங்களுக்கு கொடுத்த வாக்குத்தத்தை எங்களுடைய வாழ்க்கையில் சுதந்தரித்துக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் படி ஜெபிக்கிறோம். எங்களுடைய ஜெபத்தைக் கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
info@godismysalvationministries.com
WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Add comment
Comments