எதையாகிலும் தேவனுடைய சித்தத்தின்படி கேளுங்கள்

Published on 3 February 2023 at 05:00
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் அனுதின மன்னா 1 யோவா 5 14
Audio – 1.0 MB 104 downloads

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.


இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.

 

நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம் (1யோவா 5:14).

 

பிரியமானவர்களே, தேவன் ஆதாமையும், ஏவாளையும் சிருஷ்டித்த போது அவர்களைக்குறித்து தேவனுக்கு ஒரு நோக்கமும், ஒரு அழகான திட்டமும் இருந்தது. ஆனால் அவர்களோ அவருடைய வார்த்தையை மீறி தங்கள் பாவ இச்சைக்கு இடங்கொடுத்து பாவம்செய்து, தேவனுடைய ஆசீர்வாதத்தை இழந்தார்கள்.

 

பிரியமானவர்களே, இன்று அவருடைய பிள்ளைகளாகிய நம் ஒவ்வெருவருடைய வாழ்க்கையிலும் தேவன் ஒரு நோக்கத்தையும், ஒரு அழகான திட்டத்தையும் வைத்திருக்கிறார். ஆகவே, பிரியமானவர்களே நாங்கள் ஒவ்வொருவரும் தேவன் எங்களுடைய வாழ்க்கையில் எங்களை குறித்து வைத்திருக்கிற அவருடைய திட்டம், நோக்கம் எங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற வேண்டுமானால் அவருடைய சித்தத்தை எங்களுடைய வாழ்க்கையில் செய்ய வேண்டும். அல்லேலூயா ! 

பிரியமானவர்களே , இன்றையிலிருந்து நீங்களும், நானும்  எதை வேண்டுமானாலும் தேவனிடத்தில் ஜெபத்தில் கேட்கலாம் என்று நினைக்காமல், தேவனுடைய சித்தத்தை அறிந்து அவருடைய சித்தத்தின் படி இயேசுவின் நாமத்தின் மூலமாய் எங்களுடைய விண்ணப்பத்தை தேவனிடம் ஏறெடுக்க வேண்டும். அவ்வாறு  நாம் அவருடைய சித்தத்தின் படி ஏறெடுக்கிற ஒவ்வொரு ஜெபத்தையும் அவர் கேட்க்கிறார் என்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியமாய், நிச்சமாய், நம்பிக்கையாய் இருக்கின்றது. அல்லேலூயா. 

ஜெபம்

அன்பின் பரலோக தகப்பனே உம்மை துதிக்கிறேன், ஸ்தோத்தரிக்கிறேன். நீர் இந்த நாளில் எங்களோடு பேசின உமது வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகின்றேன். தகப்பனே உமது சித்தத்தின் படி ஏறெடுக்கிற ஒவ்வொரு ஜெபத்தையும் நீர் கேட்க்கிரதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது சித்தத்தின் படி நாங்கள் எங்கள் விண்ணப்பத்தை ஏறெடுக்க எங்களுக்கு நீர் உதவி செய்யும்படி ஜெபிக்கிறோம். எங்களுடைய ஜெபத்தைக் கேட்டதட்க்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே ஆமென்.

 

கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்

info@godismysalvationministries.com

WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின்  அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.

Rating: 5 stars
1 vote

Add comment

Comments

There are no comments yet.