

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.
தேவனுடைய சாயலாயிருக்கிற கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு, இப்பிரபஞ்சத்தின் தேவனானவன் அவர்களுடைய மனதைக் குருடாக்கினான் (2கொரி 4:4)
பிரியமானவர்களே, ஒவ்வொரு மனுஷனுடைய மனதிலும் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி பிரகாசமாக இருக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கமாகவும், திட்டமாகவும், அவருடைய சித்தமாகவும் இருக்கின்றது, ஆனால் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளி, அவிசுவாசிகளாகிய அவர்களுக்குப் பிரகாசமாயிராதபடிக்கு இருளுக்கு அதிபதியும், இப்பிரபஞ்சத்தின் தேவனுமாகிய பிசாசானவன் அவர்களுடைய மனக்கண்ணைக் குருடாக்கி அவர்களை அறியாமையினால் இந்நாட்களில் வைத்திருக்கிறான். ஆதலால் பிரியமானவேகளே, பிரகாசமான ஒளியாகிய ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் பிள்ளைகளாகிய நாங்கள் ஒவ்வொருவரும் இந்த பிரபஞ்சத்தின் தேவனான பிசாசானவனால் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியை காணக்கூடாதபடி குருடாக்கப்பட்டிருக்கிற அவர்களது மனக்கண்களை தேவன் திறக்கும்படியாகவும், அவர்கள் ஒவ்வொருவரும் இயேசு கிறிஸ்துவை ஆண்டவராகவும், இரச்சகராகவும் அவர்களது வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அவர்களும் வாழ்க்கையில் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று ஆத்தும பாரத்தோடு அவர்களுக்காக ஜெபிக்க வேண்டியது எங்கள் ஒவ்வொருவருடைய கடமையாக இருக்கின்றது. அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, உம்மை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். நீர் இந்த நாளில் எம் ஒவ்வொருவருடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பிரபஞ்சத்தின் தேவனும், இருளின் அதிபதியாகிய பிசாசானவன் கிறிஸ்துவின் மகிமையான சுவிசேஷத்தின் ஒளியை அவர்கள் காணக்கூடாதபடி குருடாக்கியிருக்கிற மனக்கண்களை இயேசு அப்பா நீர் திறக்கும்படியாக ஜெபிக்கிறோம். மற்றும் அவர்கள் உம்மை ஆண்டவராகவும், இரட்சகராவும் அவர்களுடைய வாழ்க்கையில் ஏற்றுக் கொண்டு நித்திய ஜீவனை அவர்களும் வாழ்க்கையில் பெற்றுக் கொள்ள நீர் அவர்களுக்கு உதவி செய்யும் படி ஜெபிக்கின்றோம். எங்கள் விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
info@godismysalvationministries.com
WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
Add comment
Comments