

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.
கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக (சங் 18:46)
பிரியமானவர்களே, புற ஜாதியின் தேவர்கள் “விக்கிரங்கள்”, அவைகள் மனிதனுடைய கை வேலைகள், அவைகள் மரித்த நிலைமையில் உள்ளன, அவைகளுக்கு காதுகள் இருந்தும் கேட்க்காது, அவைகளுக்கு கண்கள் இருந்தாலும் அவைகளால் பார்க்க முடியாது, அவைகளுக்கு வாய் இருந்தும் அவைகளால் பேச முடியாது, அவைகளுக்கு கைகள் இருந்தாலும் அவைகளால் தூக்கவும் முடியாது, அவைகளுக்கு கால்கள் இருந்தாலும் அவைகளால் நடக்கவும் முடியாது, அவைகள் மனிதனுடைய கட்பனைகளினால் செதுக்கப்பட்ட மனிதனுடைய கை வேலைகளாக இருக்கின்றன. ஆனால், தாவீது இங்கே கர்த்தரைக் குறித்துச் சொல்லும் போது அவர் சொல்லுகிறார், “கர்த்தர் ஜீவனுள்ளவர்“ என்று.
ஆம் பிரியமானவர்களே, நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து “ஜீவனுள்ளவர்“ அவர் நித்தியகாலமாய் ஜீவிக்கிறார், அவருக்கு ஆரம்பம் இல்லை, அவர் தம்மை நம்புகிற பிள்ளைகளை அவர்களுடைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து பாதுகாத்து இரட்சிக்கிறார். தாவீது தன்னுடைய வாழ்க்கையில் கர்த்தருடைய பாதுகாப்பையும், பராமரிப்பையும், இரட்சிப்பையும் அதிகமாய் ருசித்துப் பார்த்திருந்ததினால் அவர் கர்த்தரை தன்னுடைய வாழ்க்கையில் நன்றியோடு துதித்து, ஆராதித்து கனப்படுத்தி, மகிமைபடுத்தினார். அதனால் தான் தாவீது கர்த்தர் தன்னுடைய விண்ணப்பத்துக்கு செவி கொடுத்து அவரை எதிரிகளிடமிருந்து இரட்சித்தபடியால் “கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக“ என்று பாடி கர்த்தரை துதித்து அவருடைய நாமத்தை ஸ்தோத்தரித்தார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, தாவீதை போல், நாங்களும் எங்களை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவித்து இரட்சிக்கும் நம்முடைய ஜீவனுள்ள தேவன் இயேசு கிறிஸ்துவை “ கர்த்தர் ஜீவனுள்ளவர்; என் கன்மலையானவர் ஸ்தோத்திரிக்கப்படுவாராக; என் இரட்சிப்பின் தேவன் உயர்ந்திருப்பாராக” என்று அவருடைய நாமத்தை துதித்து, ஸ்தோத்தரித்து நம்முடைய வாழ்க்கையில் அவருடைய நாமத்தை மகிமைப்படுத்துவோம். அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, உம்மை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். நீர் இந்த நாளில் எம் ஒவ்வொருவருடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். நாம் ஆராதிக்கிற எங்களுடைய ஆண்டவராகிய நீர் எங்களுடைய பாவங்களுக்காக கல்வாரி சிலுவையில் மரித்து மூன்றாம் நாள் உயிரோடெழுப்பித்து ஜீவனுள்ளவராக இருபதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே தாவீதை இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவித்த தேவன் எங்களையும் எங்களுடைய இக்கட்டான சூழ்நிலையிலிருந்து விடுவிக்கும் படி ஜெபிக்கிறோம்.தகப்பனே . எங்கள் விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
மின் அஞ்சலில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெற info@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கு தொடர்பு கொள்ளவும்.
WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெற +447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை YouTube-ல் பார்க்க, கேட்க நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Add comment
Comments