

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.
என் சகோதரரே, நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள் (யாக் 1:2-3 )
பிரியமானவர்களே, வாழ்க்கையில் சோதனைகள் வரும் போது அமைதியாக இருக்க வேண்டும் என்று உலகப் பிரகாரமான தத்துவ ஞானிகள் ஆலோசனைகள் சொல்லுகிறார்கள், ஆனால் இந்த நிரூபத்தை எழுதிய யாக்கோபோ “நீங்கள் பலவிதமான சோதனைகளில் அகப்படும்போது, உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக எண்ணுங்கள்” என்று தேவனுடைய பிள்ளைகளாகிய நமக்கு ஆலோசனை கொடுக்கின்றார். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, நீங்கள் வாழ்க்கையில் சோதிக்கப்படும் போது, ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கையில் இந்த சோதனை என்று சலித்து சோர்ந்து போய் கர்த்தரை பற்றும் விசுவாசத்திலிருந்து விலகிப் போய் விடாமல், உங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை உங்களுக்கு உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள வேண்டும். அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, உம்மை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். நீர் இந்த நாளில் எம் ஒவ்வொருவருடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே எங்களுக்கு வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது, ஏன் எனக்கு மட்டும் வாழ்க்கையில் இந்த சோதனை என்று சலித்து சோர்ந்து போய் கர்த்தரை பற்றும் விசுவாசத்திலிருந்து விலகிப் போய் விடாமல், எங்கள் விசுவாசத்தின் பரீட்சையானது பொறுமையை எங்களுக்கு உண்டாக்குமென்று அறிந்து, அதை மிகுந்த சந்தோஷமாக ஏற்றுக் கொள்ள எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் படி ஜெபிக்கிறோம். எங்கள் விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
மின் அஞ்சலில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெறinfo@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கு தொடர்பு கொள்ளவும்.
WhatsApp-ல் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தைப் பெற+447447913889 என்ற எண்ணுக்கு தொடர்பு கொள்ளவும்.
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை YouTube-ல் பார்க்க, கேட்க நமது சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Add comment
Comments
This message spoke to me today. 🙌🏾🙌🏾