

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனங்கள்.
கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் (சங் 125:1).
பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார் (சங் 125:2)
பிரியமானவர்களே,
1. சங்கீதம் 125:1- ல் சங்கீதக்காரன், கர்த்தரை நம்புகிறவர்களை பற்றி சொல்லும் போது அவர் சொல்லுகிறார் கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள்.
2 .சங்கீதம் 125: 2- ல் சங்கீதக்காரன் கர்த்தர் தன்னுடைய பிள்ளைகளுக்கு கொடுக்கும் பாதுகாப்பை பற்றி சொல்லும் போது அவர் சொல்லுகிறார் - பர்வதங்கள் எருசலேமைச் சுற்றிலும் இருக்குமாப்போல், கர்த்தர் இதுமுதல் என்றென்றைக்கும் தம்முடைய ஜனத்தைச் சுற்றிலும் இருக்கிறார்
பிரியமானவர்களே, எருசலேமைச் சுற்றிலும் பர்வதங்கள், இருந்தது. இந்தப் பர்வதங்கள் எருசலேம் நகரத்துக்குப் பாதுகாப்பாக, அரணாக இருந்தது. அந்த பர்வதங்கள் எவ்வளவு புயல் காற்று வீசினாலும் அசைக்கப்படுவதில்லை. அதே போல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லாச் சூழ்நிலைகளிலும் அவரை நம்பியிருக்கிற அவருடைய பிள்ளைகளுக்கு ‘பர்வதமாக’ இருக்கின்றார், எருசலேம் நகரத்தை சுற்றி பாதுகாப்பாக இருக்கும் அந்த பர்வதங்கள்’ எவ்வாறு அசையாமல் எப்போதும் நிலைத்திருக்கின்றதோ, அதேபோல் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறவர்களும் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் ‘சீயோன் பர்வதத்தைப்போல்’ இருப்பார்கள், அவர்களுக்கு வாழ்க்கையில் புயல் காற்று, சூறாவளி, சுனாமி போன்றதான பெரிய மலைகள் போன்றதான பிரச்சனைகள் வரலாம் ஆனால் அவர்கள் ‘சீயோன் பர்வதங்களைப் போல் வாழ்க்கையில் அசைக்கப்படுவதில்லை’. ஏனென்றால் அவர்களுக்கு பாதுகாப்பாக, அரணாக இருக்கும் அந்த அசைக்க முடியாத பர்வதம் ‘ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ஆதலால் வாழ்க்கையில் அவர்கள் அசைக்கப்படுவதில்லை அல்லேலூயா! ‘இந்த செய்தியை வாசித்துக் கொண்டிருக்கும் நீங்களும் வாழ்க்கையில் எல்லா சூழ்நிலைகளிலும் ஆண்டவராகிய கிறிஸ்துவை சார்ந்து அவரையே நம்பியிருப்பீர்களானால், நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் 'அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப் போல்’ இருப்பீர்கள். அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, உம்மை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். நீர் இந்த நாளில் எம் ஒவ்வொருவருடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே எருசலேமைச் சுற்றிலும் பர்வதங்கள் பாதுகாப்பாக இருப்பது போல் நீர் எங்களை சுற்றிலும் பாதுகாப்பாக இருபதட்க்காக உமக்கு நன்றி செலுத்துகின்றோம். தகப்பனே கர்த்தரை நம்புகிறவர்கள் என்றென்றைக்கும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருப்பார்கள் என்று உம்முடைய வசனம் சொல்லுகிற பிரகாரம் நாங்களும் எங்களுடைய வாழ்க்கையில் எப்போதும் உம்மையே எங்களுடைய வாழ்க்கையில் நம்பியிருக்க எங்களுக்கு உதவி செய்யும் படி ஜெபிக்கிறோம், புயல் போன்றதான பிரச்சனைகள் எங்களுடைய வாழ்க்கையில் வந்தாலும் எப்போதும் அசையாமல் நிலைத்திருக்கும் சீயோன் பர்வதத்தைப்போல் இருக்க உதவி செய்யும் படி ஜெபிக்கிறோம். எங்கள் விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தை மின் அஞ்சலில் (Email) பெற info@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கும், புலனத்தில் (WhatsApp) பெற +447447913889 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளவும்.
Follow Us on
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை எங்களுடைய வலையொளி-ல் (Youtube) பார்க்க, கேட்க எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Add comment
Comments