

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனங்கள்.
நீதிமான் கர்த்தருக்குள் மகிழ்ந்து, அவரை நம்புவான் (சங் 64:10).
பிரியமானவர்களே, தாவீது இந்த 64 வது சங்கீதத்தை தான் எதிரிகளினால் நெருக்கப்பட்டு, அவர்களினால் துன்புறுத்தப்பட்டு இருந்த ஒரு சூழ்நிலையில் எழுதியிருக்கிறார்.
பிரியமானவர்களே, அன்று தாவீது எதிரிகளினால் நெருக்கப்பட்டு, அவருடைய சூழ்நிலை அவருக்கு எதிராக இருந்த போதிலும், அந்த எதிடையான சூழ்நிலைகளினால் கர்த்தர் மீது அவர் வைத்திருந்த அன்பிலிருந்து எந்த மனிதராலும், பிசாசினாலும் பிரிக்க முடியவில்லை என்பதட்க்கும், அவர் எந்த சூழ்நிலையிலும் கர்த்தரையே நேசித்து கர்த்தருக்குள் மகிழ்ச்சியாயிருந்து, கர்த்ரையே நம்பியிருந்தார் என்பதட்க்கும் சங்கீதம் 64 :10 ஆதாரமாக இருக்கின்றது, அல்லேலூயா !
பிரியமானவர்களே, இன்றைக்கு உங்களுடைய சூழ்நிலையும் தாவீதை போல் உங்களுக்கு எதிராக இருக்கின்றதா?கவலைப்படாதீர்கள், நீங்களும் தாவீதை போல் உங்களுடைய எதிரிடையான சூழ்நிலையிலும் கர்த்தருக்குள் மகிழ்ச்சியாக இருந்து, அவரை நம்புவீர்களானால் கர்த்தர் உங்களுடைய எதிரிடையான சூழ்நிலையையும் உங்களுக்கு சாதகமாக மாற்றித் தர அவர் உண்மையுள்ளவராக இருக்கிறார். அல்லேலூயா !
கிறிஸ்துவின் அன்பைவிட்டு நம்மைப் பிரிப்பவன் யார்? உபத்திரவமோ, வியாகுலமோ, துன்பமோ, பசியோ, நிர்வாணமோ. நாசமோசமோ, பட்டயமோ? (ரோமர் 8 :36)
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, உம்மை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். நீர் இந்த நாளில் எம் ஒவ்வொருவருடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே தாவீதை உமது அன்பிலிருந்து எந்த மனிதர்களாலும், பிசாசினாலும் பிரிக்க முடியவில்லை, அவர் எந்த சூழ்நிலையிலும் உம்மை நேசித்திருந்தார். தகப்பனே, தாவீதைப் போல் நாங்களும் எந்த சூழ்நிலையிலும் உம்மை நேசித்து, உமக்குள் மனமகிழ்ச்சியாயிருந்து, உம்மையே நம்பியிருக்க எங்கள் ஒவ்வொருவருக்கும் உதவி செய்யும் படி ஜெபிக்கிறோம். எங்கள் விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தை மின் அஞ்சலில் (Email) பெற info@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கும், புலனத்தில் (WhatsApp) பெற +447447913889 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளவும்.
Follow Us on
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை எங்களுடைய வலையொளி-ல் (Youtube) பார்க்க, கேட்க எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Add comment
Comments