

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனங்கள்.
கர்த்தரை துதியுங்கள்; அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. தேவாதி தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. கர்த்தாதி கர்த்தரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. ஒருவராய் பெரிய அதிசயங்களைச் செய்கிறவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. வானங்களை ஞானமாய் உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. தண்ணீர்களுக்கு மேலே பூமியைப் பரப்பினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. பெரிய சுடர்களை உண்டாக்கினவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; பகலில் ஆளச் சூரியனைப் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது; இரவில் ஆளச் சந்திரனையும் நட்சத்திரங்களையும் படைத்தவரைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங் 136:1-9)
பிரியமானவர்களே, கர்த்தர் உங்களை சிருஷ்ட்டித்து நீங்கள் தாயின் கருவில் உண்டான முதல் இந்நாள் வரை அவர் உங்களை எந்த தீங்கும் உங்களை அணுகாத வண்ணம் காத்து வழி நடத்தி வந்திருக்கிறார், உங்களுடைய தேவைகளை அதினத்தின் நாட்களில் சந்தித்து வந்திருக்கிறார், இந்த நாளிலும் நீங்கள் சுகத்தோடு, பெலத்தோடு உயிரோடு வாழ்வது அவருடைய கிருபை. அதுமாத்திரமல்ல உங்களுடைய பாவங்களுக்காக, உங்களுடைய அக்கிரமங்களுக்காக, உங்களுடைய மீறுதல்களுக்காக அவர் கல்வாரி சிலுவையில் மரித்து, மூன்றாம் நாள் உயிரோடெழுந்து உங்களை உங்களுடைய பாவ வாழ்க்கையிலிருந்து இரட்சித்து, உங்களுக்கு பரலோகத்துக்கு போகின்றதான வழியை காண்பித்து இருக்கிறார், அதட்க்காக ஆண்டவர் இயேசு கிறிஸ்துவுக்கு ஒவ்வொரு நாளும் தவறாமல் நன்றி செலுத்தி அவரை துதியுங்கள், அவர் நல்லவர், அவர் கிருபை என்றுமுள்ளது. அல்லேலூலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, நீர் இந்த நாளில் எம் ஒவ்வொருவருடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். தகப்பனே நீர் நல்லவராக இருப்பதட்க்காகவும், எங்களை சிரிஷ்டித்ததுக்காகவும், எங்களுடைய வாழ்க்கையில் நீர் செய்திருக்கிற ஒவ்வொரு நன்மைகளுக்காகவும், அதிசயங்களுக்காகவும், எங்களை இரடசித்ததுக்காகவும், பரலோகத்துக்கு போகின்றதான வழியை எங்களுக்கு நீர் காண்பித்ததுக்காகவும் உம்மை துதிக்கிறோம், ஸ்தோத்தரிக்கிறோம். தகப்பனே உம்முடைய கிருபையே நாங்கள் நம்பியிருக்கிறோம், தகப்பனே எங்களை எங்களுடைய எல்லாத் தீங்குக்கும் தொடர்ந்தும் விலக்கி பாதுகாத்துக் கொள்ளும் படி ஜெபிக்கிறோம். எங்கள் விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தை மின் அஞ்சலில் (Email) பெற info@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கும், புலனத்தில் (WhatsApp) பெற +447447913889 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளவும்.
Follow Us on
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை எங்களுடைய வலையொளி-ல் (Youtube) பார்க்க, கேட்க எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Add comment
Comments