

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்
என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் (ஏசா 48:13)
பிரியமானவர்களே, கர்த்தர் சொல்லுகிறார் என் கரமே பூமியை அஸ்திபாரப்படுத்தி, என் வலதுகை வானங்களை அளவிட்டது; நான் அவைகளுக்குக் கட்டளையிட, அவைகள் அனைத்தும் நிற்கும் என்று.
பிரியமானவர்களே, கர்த்தர் ஏசாயா தீர்க்கதரிசி மூலமாய் தனது பிள்ளைகளாகிய இஸ்ரவேல் ஜனங்களுக்கு தான் சர்வ வல்லமை நிறைந்தவர் என்றும் தன்னால் செய்ய முடியாத காரியம் என்று ஒன்றுமில்லை, தான் வானத்தையும், பூமியையும் அதில் உள்ளவை யாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார் என்பதை ஞாபகப்படுத்துகிறார்.
ஆம் பிரியமானவர்களே, நாங்கள் ஆராதிக்கிற நம்முடைய ஆண்டவர் இயேசு கிறிஸ்து சர்வவல்லவர், அவர் என்னையும், உங்களையும், உலகத்தில் வாழுகின்ற சகல மனிதர்களையும், வானத்தையும், பூமியையும் அதில் உள்ளவை யாவற்றையும் சிருஷ்டித்தவர். அவர் சர்வவல்லவர், அவரால் செய்ய முடியாது என்று சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை, அவர் சர்வவல்லவர், சகலத்தையும் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார். அல்லேலூயா !
பிரியமானவர்களே, உங்களுடைய சூழ்நிலை உங்களுக்கு விரோதம்மாக இருப்பதினால் நீங்கள் உங்களுடைய வாழ்க்கையில் சோர்வடைந்து போய் இருக்கிறீர்களா? கர்த்தர் இயேசு உங்களை பார்த்து சொல்லுகிறார் என் மகனே, என் மகளே சோர்ந்து போகாதே, நான் சர்வவல்லவர், என்னால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை, நான் சகலத்தையும் எனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறேன், உன்னுடைய சூழ்நிலையை மாற்ற என்னால் முடியும் நீ என்னால் மறக்கப்படுவதில்லை, என்று. அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே அவரை நீங்கள் வாழ்க்கையில் உங்களுடைய ஆண்டவர் என்று விசுவாசித்து, அவரை உங்களுடைய வாழ்க்கையில் ஆராதிக்கும் போது, நீங்கள் எதைக் குறித்தும் உங்களுடைய வாழ்க்கையில் சிந்திக்கவோ, பயப்படவோ, கலக்கம் அடையவோ வேண்டிய அவசியமில்லை, அவர் சகலத்தையும் அவருடைய கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறார், அவர் சகலத்தையும் பார்த்துக் கொள்ளுவார் அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, நீர் இந்த நாளில் எங்களுடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறோம். இயேசு அப்பா நீர் எங்களுடைய ஆண்டவர் என்றும், நீர் சகலத்தையும் உமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கிறீர், உம்மால் செய்ய முடியாத காரியம் ஒன்றுமில்லை என்று நாங்கள் விசுவாசிக்கிறோம். தகப்பனே வாழ்க்கையில் எங்களுக்கு விரோதமாக இருக்கும் எங்களுடைய சூழ்நிலையை நீர் மாற்றி எங்கள் ஒவ்வொருவரையும் ஆசிர்வதிக்கும் படி ஜெபிக்கிறோம்.எங்கள் விண்ணப்பத்தை நீர் கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தை மின் அஞ்சலில் (Email) பெற info@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கும், புலனத்தில் (WhatsApp) பெற +447447913889 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளவும்.
Follow Us on
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை எங்களுடைய வலையொளி-ல் (Youtube) பார்க்க, கேட்க எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Add comment
Comments