

ஆண்டவரும், இரச்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள் சார்பாக நான் உங்களுக்கு வாழ்த்துதல்களை தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
இன்றைய தினத்தில் தியானத்துக்காக எடுத்துக் கொள்ளப்பட்ட வேத வசனம்.
இப்போதும் கர்த்தராகிய ஆண்டவரே, நீரே தேவன்; உம்முடைய வார்த்தைகள் சத்தியம்; தேவரீர் உமது அடியானுக்கு இந்த நல்விசேஷங்களை வாக்குத்தத்தம்பண்ணினீர் (2 சாமூ 7:28)
பிரியமானவர்களே, தேவன் தம்முடைய வாக்குத்தத்தங்களில் உண்மையுள்ளவராக இருக்கிறார், அவர் எதை உங்களுக்கு வாழ்க்கையில் செய்வேன் என்று வாக்குப் பண்ணியிருக்கிறாரோ அதை அவர் உங்களுடைய வாழ்க்கையில் நிறைவேற்றவும் உண்மையுள்ளவராக இருக்கிறார், வாக்கு மறக்க அவர் மனுபுத்திரனல்ல (எண்ணா 23:19). அல்லேலூயா !
பிரியமானவர்களே, ஆபிரகாம், யாக்கோப்பு, தாவீது மற்றும் வேதத்தில் எழுதப்பட்டிருக்கிற மற்ற எல்லா பரிசுத்தவான்களின் வாழ்க்கையிலும் தேவன் எதை செய்வேன் என்று அவர்களுக்கு வாக்குப் பண்ணியிருந்தாரோ அவற்றை தேவன் அவர்களுடைய வாழ்க்கையில் செய்தும் முடித்தார். அல்லேலூயா !
ஆகவே பிரியமானவர்களே, நீங்களும் உங்களுடைய வாழ்க்கையில் தேவனையும், அவருடைய வார்த்தையையும் தொடர்ந்து விசுவாசியுங்கள், அவர் உங்களுடைய வாழ்க்கையிலும் உங்களுக்கு செய்வேன் என்று வாக்குப் பண்ணினதை செய்து முடிக்க தேவன் உண்மையுள்ளவராக இருக்கிறார். உங்களுடைய சூழ்நிலையை பார்த்து இது என்னுடைய வாழ்க்கையில் எங்கே நடக்கப் போகிறது, சாத்தியமே இல்லை என்று நினைத்து சர்வவல்லவரை உங்களுடைய வாழ்க்கையில் மட்டுப்படுத்தி விட வேண்டாம், வேதம் சொல்லுகிறது மனுஷனால் முடியாதது தேவனானால் கூடும் என்று (லூக் 18:27).அல்லேலூயா !
ஜெபம்
அன்பின் பரலோக தகப்பனே, நீர் இந்த நாளில் எங்களுடன் பேசின உமது ஜீவனுள்ள வார்த்தைக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இயேசு அப்பா நீர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருபதட்க்காகவும், நீர் வாக்குத்தத்தத்தில் உண்மையுள்ளவராக இருபதட்க்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். தகப்பனே யார் யாரெல்லாம்ம் இந்நாளில் உம்முடைய வார்த்தையை விசுவாசிக்கிறார்க்ளோ அவர்களுடைய வாழ்க்கையில் நீர் கொடுத்த வாக்குத்தத்தை ஏற்ற காலத்தில் நிறைவேற்றும் படி ஜெபிக்கிறேன். நீர் எங்கள் விண்ணப்பத்தை கேட்டு எங்களுக்கு பதில் கொடுப்பதட்க்காக உமக்கே நன்றி செலுத்தி இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் ஜெபிக்கிறேன் எங்கள் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்.
கர்த்தரின் பணியில், தேவன் என் இரட்சிப்பு ஊழியங்கள்
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனத்தை மின் அஞ்சலில் (Email) பெற info@godismysalvationministries.com என்ற விலாசத்துக்கும், புலனத்தில் (WhatsApp) பெற +447447913889 என்ற எண்ணுக்கும் தொடர்பு கொள்ளவும்.
Follow Us on
தேவன் என் இரட்சிப்பு ஊழியங்களின் அனுதின தியான வசனம், வேத பாடம் மற்றும் தேவ செய்திகளை எங்களுடைய வலையொளி-ல் (Youtube) பார்க்க, கேட்க எங்களுடைய சேனலை சப்ஸ்கிரைப் செய்யுங்கள்.
Add comment
Comments